Monday, December 30, 2019

பெண்ணே வருவாய்!

A Translation of the poem 'Oh Baby Girl' 
By My friend LILY SWARN written on 11.10.2019

பெண்ணே வருவாய் !
*************************

இறுக்கிய சடையும் இதழ்க் கடை நகையும் 
அமுதை நிகர்த்த அழகிய உருவும் 
அமைந்த பெண்ணெனும் மதலை வரமே!
மற்றெதும் இணையிலா மங்கள நிறமே!

கன்னியை தேவியாய் கற்பனை செய்து 
கனிவாய் பூஜைகள் அனைத்தும் செய்து 
நவராத்திரி எனும் பண்டிகை தனிலே 
நவநவ மாய்கொண் டாடும் நாடிது !

காச்மீரம் முதல் கன்யா குமரி 
ஈறாயெங்கும் இறையெனப் பெண்ணை 
மதித்துப் போற்றும் மங்கள நாடிது!
மங்கள கௌரியாய் மகளைப் போற்றும் 
சதியும் சாவித்திரியும் நிறையும் 
வீணையும் ஏடும் எடுத்த வாணியாய் 
இன்று சக்தியாய் நாளை காளியாய் 
என்றும் பெண்மையைப் போற்றும் நாடிது !

இத்தகை அன்பும் பண்பும் ஒருபுறம் 
நிறையும் நாட்டில்தான் நீசரின் கூட்டமும் 
நிறையத் திரியும் நிம்மதி அழிக்கும்!
பெண்மையின் மானம் நசிக்கும் நரன் முன் 
நரமா மிசம் தினும் அரக்கரே மேலெனத் 
தோன்றிடும் கணங்கள் !
ஆயிரம் வாள்கொண் டறுத்திடும் மனதை  
அருவருப் பதனின் உச்சம் இதுவே !
ஊழ்வினைப் பயனோ?

மானபங்கமும் ஈனக்கொலையும்! 
இத் தரமற்ற செயல்களைச் செய்யும்
ஈனர் நிறைந்த நாடா யிதுவும் 
மாறிவிட்டதே மானம் அழிந்ததே!

யாரே நினைந்தார் இத்தகை ஈனச் 
செயல்களும் இங்கே இந்திய நாட்டில் 
இதமாய் பெண்ணைப் போற்றிய நாட்டில் 
எளிதாய் நடந்து தீரும் என்றே !

கண்ணைப் பொசுக்கும் காமத்தீ முன் 
தாயும் தாரமும் ஒன்றென வாயினர்! 
மானபங்கமும் மகளிர் கொலையும் 
செய்யும் மக்கள் வாழும் நாட்டில் 
வாழ்வதும் பாவம் ! 
வீழ்ந்து மாயும் செயலே சாலும்!

இல்லை! இல்லை! பெண்ணே போற்றி!  
பெண்மை என்பது பேடிமை இல்லை 
ஏற்றம் கொண்டு எழுவாய் நீயும் 
சீற்றம் கொண்டு சீறிடுவாயே !

அழிந்த சாம்பல் அதனில் இருந்து 
அழகாய் உருப்பெற் றெழுவாய் நீயும் 
அரக்கர் தம்மை அழித்திட வென்றே 
ஆற்றல் தன்னைக் காட்டிட வென்றே!

ஈடு செய்யவே இயலா நட்டம்! 
இருப்பினும் சும்மா விடலாகாது !
பீனிக்ஸ் பறவை போலே நீயும்! 
பிடைத்து எழுந்து பறப்பாய் நீயும்!

ஏதேனும் ஓர் உருவில் தோன்றித்
தேறா மாந்தர் தீயோர் தம்மைத் 
திறம்பட அழித்துத் தருமம் என்பது 
இதுவெனக் காட்டி ஈடு செய்வாய்!

வெந்திடும் பாலை தனிலும் நீயோர் 
பூமணம் எனவே பரவிட வாராய் !
வெற்று மணலாய் நிறைந்திடு நதியின் 
பாதையில் பாற்கடல் எனவே வாராய் !

அன்பே மணமாய் எங்கும் நிறைவாய்! 
அன்பெனும் ஊற்றாய் பொங்கிப் பெருகி 
அன்பே உலகின் முதல் என உணர்த்தி 
அன்பே பெண்ணே வருவாய் நீயும் !

அன்பெனும் பண்பால் புன்மைக ளெல்லாம் 
அகன்றே யோடிட அருளாய் வருவாய் !
அனைத்தும் மறந்து அழகே உருவாய் 
அன்பே பெண்ணே வருவாய் நீயும் !
அன்பே பெண்ணே வருவாய் நீயும் !

கி.பாலாஜி
13.10.2019
இரவு 11.10

A Translation of the poem 'Oh Baby Girl' 
By My friend LILY SWARN written on 11.10.2019
Which is given below: 

On International Day of the Girl child 

Ni kudiye!
(O baby girl)

Tightly curled pink hands 
Bundles of delight 
Swaddled in pink blankets 
Cherubic Angels with ruby lips 
Baby girls made of all things sweet and spice 
Daddy's little girls and mama's heartbeats 
Rosy hues with fairy wings 
Gossamer shimmer on dainty tips 

Long haired Devis in temples of yore 
Adorned with tiaras in Nepal's mountains up high 
Goddess incarnate in Indian legends 
A Sati , Savitri or Veena Pustak Dharini 
Shakti today and Kali next 
The slayer of demons astride a tiger

Who would have known that the land that worships you 
Will treat you so harshly ? 
Gang raped and throat slashed ?
Whipped , beaten in the shelter of four walls 
Your body marauded , your spirit crushed ?
Servile , meek and left to die 
With full blown AIDS in halls of hell ?

No , you don't give in ,you wondrous one 
You awake from your ashes and snarl at your deflowerer 
You arise like the Phoenix and devour the demons
You are the beatific light of love 
You infuse the streams with the milk of love 
You perfume the desert with the scent of musk 
You are love , love , love 
Grateful to have you my baby girl !

Copyright Lily Swarn 11.10.2017

Monday, April 22, 2019

சங்கு புஷ்பம் மலரும் போது ...ராகம்: தேஷ்

சங்கு புஷ்பம் மலரும் போது
சகுந்தலை உந்தன்  நினைவு வரும்
அந்திமாலைகள் ஆடை மாற்றும் போது
சகுந்தலை உந்தன்  நினைவு வரும்
சகுந்தலே ......சகுந்தலே.          (சங்கு)

வானத்தைக் குளிர்ச்சியால்
நனைத்திடப் பௌர்ணமி
மண்குடமேந்தி நடக்கையிலே
நீளக்கருவிழி மேகங்கள் உரசிட
நின்னைக் குறித்தே நினைவு வரும்
நின்னைக் குறித்தே நினைவு வரும்
சகுந்தலே ......சகுந்தலே.           (சங்கு)

தாமரையிலைதனில்
பைங்கொடிப் பெண்ணாள்
காதல்  கடிதம் எழுதுகையில்
கருநீலக் காடுகள்
மலர்மெத்தை விரிக்கையில்
நின்னைக் குறித்தே நினைவு வரும்
நின்னைக் குறித்தே நினைவு வரும்
சகுந்தலே ......சகுந்தலே.            (சங்கு)

--கி. பாலாஜி
06.04.2018

பாடல் மூலம்- மலையாளத் திரைப்படம் சகுந்தலா
"சங்கு புஷ்பம் கண்ணெழுதும் போள்"
எழுதியவர்: வயலார் ராமவர்ம

மூலமொழிப் பாடலின் மெட்டு மாற்றாமலேயே

மொழிபெயர்க்கப்பட்டது.

செல்லமே உந்தன்......

செல்லமே உந்தன் சிவந்த கன்னம் கண்டு
ராகம் : தேஷ்

செல்லமே உந்தன் சிவந்த கன்னம் கண்டு
கவலையில் கருத்தது அந்தி வானம்
கார் முடிக்கற்றையின் காரொளி தனைக் கண்டு
முகம் வெளுத் தொளிந்ததோ முன்னிருட்டு.       (செல்லமே)

காலம் கடந்தது தெரியவில்லை - நாமோ
காரிருள் பகல் ஏதும் அறியவில்லை
பிரிந்தவர் நாம் கூட பேசுவது எங்கே
பின்னும் முன்னும் அறிவது எங்கே.                       (செல்லமே)

இருள் சூழ் நேரத்தில் என் முன்னில் நீ வர
இன்முகம் கதிரொளி தனை வீசும்
பகலவன் காய்கையில் பக்கத்தில் நீ வர
மதிமுகம் தண்ணொளி தனை யீயும்.                       (செல்லமே)

கண்மணி நீ என் கரம் பிடித்துடன் வந்தால்
கால மாற்றங்கள் தெரியாது
காலமாம் கன்னிப் பருவமும் நீயே
கடல் வான் புவி அழல் காற்றும் நீயே.                        (செல்லமே)

K.Balaji
March 27 2019
11.45 pm

ഓമനേ നിൻ കവിൾ കുങ്കുമം കണ്ടപ്പോൾ Oman's non kaviL kunkumam kaNdappOL என்ற மலையாளப் பாடலின் மொழிபெயர்ப்பு

இதற்கு நண்பன் ராம் சரசுராமின் விமர்சனம் :

"மன்னிக்கணும்ப்பா. இன்று முழுவதும் பிஸி. பிஸியாக இருப்பது என்பது வரமா சாபமா தெரியவில்லை. அம்மாவுக்கு கைகளில் கொஞ்சம் பிரச்சனை இருக்கிறது. ஸ்கின் ப்ராப்ளம். எத்தனை சொன்னாலும் கேட்காமல் அந்த கைகளிலேயே பல வேலைகள் பார்ப்பார்கள். அது அவரது குணம். மாற்றுவது கடினம். ஆகவே அந்த பிரச்சனை கொஞ்சம் சரியாகும். பிறகு தொடரும். இதுவொரு தொடர்கதை. இன்னைக்கு அது சம்மந்தமாக ஒரு டாக்டரிடம் போக வேண்டி இருந்தது. மதியம் 1 மணிக்கு மேல் அப்பாயிண்ட்மெண்ட். கொழுத்துகிற வெய்யில். வெய்யிலின் எதிரொலியில் வண்டியில் வியர்வை சிந்த ஒரு பயணம். கிட்டத்தட்ட 30 கிமீ. திரும்பி வரும் போதும் அந்த வெய்யில் வெளியே காத்திருந்து மீண்டும் என்னைத் துரத்த தொடங்கியது. வீட்டிற்கு வந்துதான் உங்கள் மொழிபெயர்ப்பு கவிதையை படிக்கத் தொடங்கினேன். "செல்லமே உந்தன் சிவந்த கன்னம் கண்டு.." நிஜமாய் இந்த ஆரம்ப வரியிலேயே அசந்து போனேன். என்னவொரு க்யூட்! ஒரு குழந்தையின் குண்டு கன்னம் மாதிரி.! தொட்டுத் தொட்டு படிக்கத் தோன்றியது. அதற்கு அடுத்த வரியிலேயே கற்பனை இன்னும் அழகாய் சிறகடித்தது. "கவலையில் கருத்தது அந்தி வானம்..".
காதல் உலகத்தின் அற்புதம். அதுதான் இந்த காலத்தையே நகர்த்துகிறது. அந்த உணர்வே இந்த வாழ்வின் உன்னதம். அதை கொண்டாடத் தெரிந்தவனே வாழ்கிறான். "காலம் கடந்தது தெரியவில்லை - நாமோ
காரிருள் பகல் ஏதும் அறியவில்லை.." "கண்மணி நீ என் கரம் பிடித்துடன் வந்தால்
கால மாற்றங்கள் தெரியாது."   இந்த வரிகளில் அந்த காதலின் நிலை இன்னும் கவித்துவமாகிறது. அதிலும் "பகலவன் காய்கையில் பக்கத்தில் நீ வர
மதிமுகம் தண்ணொளி தனை யீயும்.." - வாவ்! என்னவொரு அழகு! ஏம்ப்பா அந்த ஒரிஜினல் கவிதையில் இவ்வளவு அழகான வார்த்தையும் கவித்துவமும் இருந்ததா? இல்லை அது இன்னும் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்கள் கற்பனைகள் செய்த வேலையா? மொழிபெயர்ப்பு கடினமான பணி! அந்த மொழிக்கு இணையான வார்த்தைகளை தேடி, அந்தக் கவிதையில் அந்த கவிஞன் என்ன உணர்ந்தானோ அந்த உணர்வை நம் மொழியில் தருவதென்பது கடினமான இலக்குத்தான். அதை உங்கள் உழைப்பும் கற்பனையும் அற்புதமாய் செய்திருக்கிறது. "செல்லமே உன் சிவந்த கன்னம் கண்டு" வை உங்கள் குரலிலும் கேட்கக் கிடைத்ததுதான்ப்பா நான் பெற்ற பேரின்பம்! அந்த கவிதை வரிகளுக்கு இன்னும் ஒளியூட்டியது என்னை பொறுத்தவரை உங்கள் குரல்தான். அதுதான் என் எதிர்பார்ப்பு! அதற்கு என் நன்றிகள்ப்பா.  நீங்கள் எனக்குக் கிடைத்ததை ஒவ்வொரு நொடியும் பெருமைப்படும் என் மனம் இன்றும் இன்னும் ஒரு படி மேலே போய் காலரை தூக்கி விட்டு பெருமைப்பட்டுக் கொண்டது. இந்தத் தமிழ் போல் என்றும் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதே என் பிரார்த்தனை! இன்று பகல் முழுவதும் என்னையே சுற்றிக் கொண்டிருந்த வெய்யில் இந்த கவிதையைப் படித்த பின் சட்டென விலகிப் போனது. வராந்தாவில் அமர்ந்து வானம் பார்த்து கொண்டேதான் இதை எழுதுகிறேன். அடித்த காற்றில் அவ்வளவு குளிர். அது இந்த கவிதையில் பிறந்த குளிர்!! நன்றிப்பா. நிறைய நிறைய எழுதுங்கள். அது எங்கள் மனதிலும் வந்து நிறையட்டும். வாழ்த்துக்கள்!!
👏👌👍💐😊🙏"

Friday, October 19, 2018

உலர்ந்த சருகின் உற்சாகம் !


உலர்ந்த சருகாகி யோர் 
மூலையில் விழுந்துவிட்டேன்!


பயனற்ற பொருளாகி யோர் 

பாரமாய் நின்றுவிட்டேன் !

பட்டயம் கட்டப்பட்ட 
பல்லக்குக் குதிரை யொன்று 
பார்க்கவோ ராளின்றிப் 
பாதையின் ஓரத்தில் 
பரிதவித்து நிற்கிறது !




காலத்தின் மாற்றத்தால் 

கண்ணியங்கள் மறக்கப்படும்! 
கற்பூரம்போலக் 
காற்றில் கரைக்கப்படும்!

என்றாலும் மனத்தின் 
ஏதோவோர் மூலையிலே 
நம்பிக்கையின் கீற்றொன்று 
மெல்லப் புறப்பட்டு 
மேனியைச் சிலிர்க்க வைக்கும்!
மேன்மைகள் நிலைக்கவைக்கும்!
கடந்த காலத்தின் சிறப்பெல்லாம்
கல்லோவிய மாகிக் 
களிக்கவைக்கும்!
கண்களைக் குளிரவைக்கும்!


--Translation and picture : K.Balaji

Above is a translation done by me, 
of the following poem by my friend

A leaf of life

I shrivelled up and aged 
Useless and burdensome 
A horse put to paddock 
Blown away to a corner 
Soon to be forgotten 
A lost hope 


Copyright Lily Swarn 13.10.2016

Thursday, September 27, 2018

பனித்துளி நாட்டியம்


பனித்துளி நாட்டியம்
***********************


பச்சை இலைகளின் 
மேலே ஆடும் 
பனித்துளிகளின் 

பரதநாட்டியம்!
இலைகளின் நரம்பின்
ஊடே ஓடும் 
இம்மி அளவே 
துளிகள் ஆடும்!
மதில் மேல் பூனை 
என்னும் பழஞ்சொல்
மனதினில் வந்து 
நிற்கும் போகும் 
வெள்ளித் துளியாய் 
மனதில் நிறைந்து 
வைரத் தொளியாய்
நெஞ்சை நிமிர்த்தும்!

நிலவின் அமுதத்
துளிகளை விழுங்கி
நெஞ்சம் போதை 
தனில் தள்ளாடும்!!
பருவ மாற்றம் 
தருமோர் பசுமை 
உள்ளம் நிறைக்கும் 
உவகை ஊற்றாய்!

கோடி கோடியாய் 
இன்பம் மனதைக் 
கொள்ளை கொண்டு 
போயிடும் எனினும்
அத்தனையும் ஓர் 
அரைக்கண வாழ்வே! 
ஆடும் பனித்துளி 
போலே மறையும்!

அடுத்த கணத்தில்
இல்லா தாகும்!

கண்களின் வழியே 
கண்ணீர்த் துளியும்
பனித்துளி போல் தான் 
படபடத் திறங்கிக்
கன்னக் கதுப்பினில் 
சரிந்தே ஓடும் 
காவியக் கனவுகள் 
கலைந்தே போகும் !

கண்ணிமை கனக்கும் !
காலம் சிரிக்கும் !
கணமோ யுகமாய்
பரந்து விரியும் !

-- கி. பாலாஜி
27.09.2018

Lily Swarm அவர்கள் எழுதிய dew drops என்ற கவிதையின் மொழிபெயர்ப்பு.
This is a translation in Tamil,  of the English poem titled
 'Dew Drops' by Lily Swarn.

I have rendered the poem and it can be heard by clicking the following Link: 


The Original lines by Lily Swarn in English are given below :

Dew drops 

Ballerinas dancing on green leaves 
Like cats on hot tin roofs 
Glimmering and luminescent 
With hearts of diamonds 
Little moon drops drunk on life 
Staggeringly high on monsoon madness 
Coruscating inside their wet insides 
Bubbles of enchantment 
With tiny life spans 
Dew drops like tear drops 
Wiped off the cheek 

Copyright Lily Swarn 27.9.2018
Pic. (C) Lily Swarn

Tuesday, September 11, 2018

ஸோஹினி - மஹிவால் காவியக் காதல்

This is a Tamil translation of the English poem titled 'Sohini Mahiwal' by Lily Swarn. Story of Sohini and Mahiwal is one of the popular tragic love stories of Punjab . Here goes the Tamil version with a prelude !


காதலுக்கு சாவில்லை 
என்பதிலே கண்பனித்தோம் 
ஒப்புதலை கனமான 
மனத்துடனே நாமளித்தோம் !
எனில்
காதலுக்கு வாழ்வும் இல்லை 
என்பதனை நாமிங்கே 
காண்கின்றோம் !
பிறவிகள் 
எத்தனைதான் எடுத்தாலும் 
பிறந்துவந்த காதல் மட்டும்
வாழ்ந்து சுகிப்பதில்லை 
வளம் பெறவே 
வாழ்வதில்லை !

இது போன்ற காதலொன்றே 
ஸோஹினியும் மஹிவாலும் 
கொண்டிருந்த காதலதும் !
அவர் கொண்ட காதலதில் 
பொய்மை இருக்கவில்லை !
புளித்ததொரு உள்நோக்கம் 
எதுவுமே இருக்கவில்லை !

எனில்
உண்மைக் காதலுக்கு 
உதவிடுவார் எவருண்டு?
ஊராரின் பேச்சுக்கு 
எல்லைதான் எங்குண்டு?

இதோ
கேளுங்கள் இவர் கதையை !
-------------------------------------------------

ஸோஹினி - மஹிவால் காவியக் காதல் 
----------------------------------------------------------------

வெண்ணிலவின் வெள்ளிக்
கிரணங்கள் பிரதிபலிக்கும் 
'சேனாப்' நதியலைகள், 
'கித்தா' நடனம்போல் 
துள்ளித் தாமங்கே 
பேரலையாய்த் தானெழும்பும் 
பேரழகைக் காணத்தான் 
கண்ணிரண்டும் போதாதே !

கணுக்காலில் இணையிட்ட 
சலங்கைகளின் சப்தமதும்
சலசலக்கும் நதியோசை 
தன்னோடு நடம்புரியும்! 
மயக்கும் மணம்வீசும் 
இருளலையின் இயல்போடு
இணைந்தே மனம்தானும்
தவழ்ந்தே தாளமிடும் !

களிமண் பானையொன்று 
கைக்கீழில் இசைந்திருக்க,
இனிய நினைவுகளின் 
அசைவோடு இடுப்பசைய
சரிகைக் கரையிட்ட 
முக்காட்டில் முகம்நிறைந்த
நாணம் கசிந்தோட 
நல்விழிகள் படபடக்க 
சுற்றுமுற்றும் பார்த்தபடி 
ஸோஹினி நடக்கின்றாள் 
சுந்தரன் முகமதனை
நினைவினில் சுமக்கின்றாள் !

காதல் அலையதனின்
வெண்மை நுரைபொங்கக் 
காதலன் காத்திருப்பான் 
மறுகரையில் என்பதனைக் 
கையை அணைத்திருக்கும்
தந்த வளைகளதன்
அசைவின் ரீங்காரம் 
அவளுக்கு எடுத்துரைக்க

அந்த
ஒற்றைப் பார்வையதன்
ஓராயிரம் பொருளுக்காய் 
ஏங்கும் மனத்துடனே
ஏந்திழை நடந்திட்டாள் !
என்றும் போலவேதான் 
நீரில் அமிழ்ந்திட்டாள்
மிதவை போலத்தன்
பானையைக் கவிழ்த்திட்டாள் !

ஒன்றா யிணைந்தந்த
மிதவை தன்னுடனே 
மிதந்தே தான்செல்வாள் 
தலைவன் தனைக்காண்பாள்
அதுவே தினந்தோறும் 
அவளது செயலாகும் 
அந்தோ அன்றையநாள்
விதியின் நாளாமே !

வஞ்சகம் புரிந்தோரின் 
நெஞ்சஞ்சும் செயலாலே
கவிழ்த்த மிதவையதும்
கணத்தில் உடைந்ததுவே!
பாவை மிதந்தாளே
பாவிகள் மகிழ்ந்தாரே 
பார்த்த காதலனும்
நீரில் குதித்தானே !

அவளே பானையிலே
வரைந்த ஓவியமும் 
அவர்களின் காதல்போல் 
கரைந்தே போயினவே !
பட்டுத் தறிபோன்ற 
மென்மை உணர்வாலே
நெய்த காதலுமே
நீரில் அமிழ்ந்ததுவே !

இருமனம் இணைந்தால்பின் 
திருமணம் என்பாரே
ஈங்கிதை என்சொல்வோம் 
தீங்கிழைத் தனரன்றோ 
கண்ட கனவெல்லாம் 
கரைந்தே போயினவே 
காதல ரிருவருமே 
இணைந்தே மாண்டனரே !

காதல் மட்டுமென்றும் 
பிரிவதற்கு மாத்திரமோ 
பிறவிகள் கடந்தாலும் 
பிரிவுமட்டும் மாறாதோ !
'என்னருமை மஹிவாலே
எனைக்காக்க வென்றெண்ணி 
ஏனோ நதிகலந்தாய்
ஏனோ தனைமறந்தாய்?

மாசறியா உடலிரண்டும் 
மரித்தாலும் பிரிந்தாலும் 
மனங்கள் என்றென்றும் 
பிரிவது தானில்லை !
'சேனாப்' நதியம்மா 
நீயே கதியம்மா !
உன்னோடு கலந்திட்ட 
காதலனை நான்சேர்வேன்

உன்னிலே மிதக்கின்ற 
என்னுடலே நீயெனக்கு
உடுத்திவிட்ட மணப்புடவை
உண்மையான தோர்மிதவை !
உன்னுலகே நாமிருவர் 
வாழத் தகுந்தவோர் 
உன்னத உலகாகும் 
உண்மை இதுவாகும்"

என்றே சொன்னவளை 
எதிர்கொண்டாள் நதியன்னை 
ஏற்றமிகு தன்கரத்தில் 
ஏந்திப் புறப்பட்டாள் !
வாழ்க்கை இணைப்பதற்குத் 
தயங்கியதோர் உறவுகளை 
மரணம் இணைத்ததுவே 
மனங்கள் இணைந்தனவே !

--கி.பாலாஜி 
-- 09 ஆகஸ்ட் 2018

*கித்தா Giddha Dance is a 
Folk Dance of Panjab . 
Story of Sohini and Mahival 
is one of the popular 
Tragic Love Stories of Punjab.


The Original lines in English by Lily Swarn is given below:

SOHNI MAHIWAL
Silvery moonbeams draped 
in gossamer 
dancing the Giddha dance 
in jubilation 
Voluminous majestic waves 
rising ominously
In the glimmering waters of 
the Chenab river

The sound of silver anklets 
tip toeing
Musically into the fragrant 
darkness
The earthen pitcher tucked 
beneath one arm 
The supple waist swaying 
to the song in her heart

Sohni smiled shyly below 
her golden gota bedecked 
veil 
The whispering bangles 
tinkling softly on her ivory 
wrists 
Her Mahiwal waited across 
the foaming waters of love 
Sighing and yearning for 
that one glance of his beloved 
life

The Clay pitcher slipped 
deftly into the inviting 
expanse of liquid
Inverted in order to float 
across the frothing folds of 
pining 
The silken skeins of 
sensuous satin love 
smoothed her fears 
The pot was fragile 
deceptive though painted 
by Sohni herself

It sank without a whimper 
like her frozen dreams 
Love suffered in each birth 
again and again 
Destiny emerged victorious 
baring her fangs 
O my Mahiwal why did you 
dive to save me?

O River, make your bosom 
my bridal enthrall
Where I conceal the 
fragrance of my Mahiwal!

(Death United them 
as Life never could)

Gota -a golden ribbon 
used to border clothes.
Giddha-Folk dance of 
Punjab performed by 
women on festive 
occasions like weddings.

© 2017. Lily Swarn. 
All rights reserved.

Friday, August 31, 2018

யாக்கையின் பெருமை !



யாக்கை !

நிலையாத யாக்கை யெனினும் - அது
நிலைக்கிறது எண்ணங்களில்,
நிகரற்ற நினைவாற்றல் திறனோடு!
பொய்மை அதிலில்லை, புரட்டில்லை, 
போகாத வழிகாட்டிச் செலுத்துவ தில்லை!
எனில் மனம் அங்கே 
வழிநடத்தும் மாயம் உண்டு!

யாக்கை 
அன்பும் காட்டும்;
அழிக்கவும் செய்யும்;
எனில் அதன்
விகிதாச்சாரம் ஒன்றே!

அறிவை ஆள்கிறது யாக்கை!
அதில் ஏழு சக்கரமும் 
செய்கிறது வாசம் !
பசி, தாகம் அதற்குண்டு !
ஊக்குவிக்கும் உத்வேகம்
அதிலுண்டு;
உன்மத்தம் பிடிக்க வைக்கும் 
காமதாகம் அதற்குண்டு!
எனில்
அன்னையெனும் உணர்வின்
அருகாமை அறிந்து கொள்ளும்!
வெறுப்படையச் செய்யும்;
வெறுக்கவும் செய்யும்;
வெட்டினாலும் சலியாது;
வெறுத்தாலும் தளராது;

அரசனையும் ஆண்டியாக்கும்
வலுவுண்டு !
அரசுக் குரியதோர்
அகந்தையும் அதற்குண்டு; 
நிறமும் குலமும்
அதற்கொரு பொருட்டல்ல;
அண்டமோ காலமோ 
அதற்கொரு அளவல்ல;
அது அணியாத ஆடை 
கிடையாது; 
அண்டபகி ரண்டமும் 
அதனுடைய ஆடைதான்! 
அங்கிங் கெனாதபடி
எங்கும் அதன் சலனம் !
சொந்தங்கள் அதற்கில்லை,
பந்தங்கள் பொருட்டில்லை!

யாக்கை தனைக்காக்க
யார்க்கும் வழியில்லை;
நெருப்பில் நீறாகிப் போகும்; 
நீரில் சடலமென மிதக்கும்;
மறைந்த அழகுக்கு அது என்ன
மாற்றமா கேட்கிறது?

மதனாக வாழ்ந்தாலும் 
மண்ணாகித் தானங்கே 
மடிந்து போகிறது !
கல்லறை மேல்வைத்த 
மலர்க்கொத்தும் 
கனத்த மனம் சிந்தும் 
கண்ணீரும் அறியாமல் 
மரணித்து மண்ணுக்குள் 
மக்கிப் புதைகிறது ! 

மனமோ மரத்துப்
போகிறது !

--கி.பாலாஜி 
K.Balaji
30.08.2018

An almost translation of the poem 'FLESH' , 
Written by Lily Swarn : (Or is it just ideas borrowed?)

Original in English : 

FLESH 

Flesh has a brilliant memory 
Elephantine and accurate 
It never lies 
It doesn't mislead 
Flesh knows 
Instinctively Arjunesque! 
It can kill or love with the same equanimity 
Flesh is what rules the brain 
The seven chakras bow to it 
Flesh devours 
Flesh inspires 
Flesh crawls and creeps into amorous bowers 
Flesh disgusts 
Flesh abhors 
Flesh knows it's mother by her scent 
It makes kings of paupers 
It shuns not by race or colour 
Flesh advances in full regalia 
Untouched by time and space 
It ferrets out its own 
Through eons and milky ways 
It rides on meteors and parades in the village square
Bereft of clothes , stoned and maimed 
Flesh utters not a word when armies mutilate 
Flesh is neither yours nor mine 
It's black, yellow, brown and white 
Flesh burns on pyres with widows and orphans 
Flesh asks not recompense for its charred visage 
It merely turns to ash and flips into the rivers 
Or lies stone cold as a cadaver to be skinned on a hospital table 
Or sleeps with death in a muddy grave under the white lilies that you lay on it through your veil of tears .
Copyright Lily Swarn 
30.8.2018
 —

அத்யாத்ம ராமாயணம் - வேள்விக் காப்பு /அகலிகையின் துதி

பராசக்தி 🙏 This is a Translation of a portion from the Malayalam Book "Adyaathma Ramayanam Malayalam - SwamiChidananda Saraswathi , wh...