யாக்கை !
நிலையாத யாக்கை யெனினும் - அது
நிலைக்கிறது எண்ணங்களில்,
நிகரற்ற நினைவாற்றல் திறனோடு!
பொய்மை அதிலில்லை, புரட்டில்லை,
போகாத வழிகாட்டிச் செலுத்துவ தில்லை!
எனில் மனம் அங்கே
வழிநடத்தும் மாயம் உண்டு!
யாக்கை
அன்பும் காட்டும்;
அழிக்கவும் செய்யும்;
எனில் அதன்
விகிதாச்சாரம் ஒன்றே!
அறிவை ஆள்கிறது யாக்கை!
அதில் ஏழு சக்கரமும்
செய்கிறது வாசம் !
பசி, தாகம் அதற்குண்டு !
ஊக்குவிக்கும் உத்வேகம்
அதிலுண்டு;
உன்மத்தம் பிடிக்க வைக்கும்
காமதாகம் அதற்குண்டு!
எனில்
அன்னையெனும் உணர்வின்
அருகாமை அறிந்து கொள்ளும்!
வெறுப்படையச் செய்யும்;
வெறுக்கவும் செய்யும்;
வெட்டினாலும் சலியாது;
வெறுத்தாலும் தளராது;
அரசனையும் ஆண்டியாக்கும்
வலுவுண்டு !
அரசுக் குரியதோர்
அகந்தையும் அதற்குண்டு;
நிறமும் குலமும்
அதற்கொரு பொருட்டல்ல;
அண்டமோ காலமோ
அதற்கொரு அளவல்ல;
அது அணியாத ஆடை
கிடையாது;
அண்டபகி ரண்டமும்
அதனுடைய ஆடைதான்!
அங்கிங் கெனாதபடி
எங்கும் அதன் சலனம் !
சொந்தங்கள் அதற்கில்லை,
பந்தங்கள் பொருட்டில்லை!
யாக்கை தனைக்காக்க
யார்க்கும் வழியில்லை;
நெருப்பில் நீறாகிப் போகும்;
நீரில் சடலமென மிதக்கும்;
மறைந்த அழகுக்கு அது என்ன
மாற்றமா கேட்கிறது?
மதனாக வாழ்ந்தாலும்
மண்ணாகித் தானங்கே
மடிந்து போகிறது !
கல்லறை மேல்வைத்த
மலர்க்கொத்தும்
கனத்த மனம் சிந்தும்
கண்ணீரும் அறியாமல்
மரணித்து மண்ணுக்குள்
மக்கிப் புதைகிறது !
மனமோ மரத்துப்
போகிறது !
--கி.பாலாஜி
K.Balaji
30.08.2018
An almost translation of the poem 'FLESH' ,
Original in English :
FLESH
Flesh has a brilliant memory
Elephantine and accurate
It never lies
It doesn't mislead
Flesh knows
Instinctively Arjunesque!
It can kill or love with the same equanimity
Flesh is what rules the brain
The seven chakras bow to it
Flesh devours
Flesh inspires
Flesh crawls and creeps into amorous bowers
Flesh disgusts
Flesh abhors
Flesh knows it's mother by her scent
It makes kings of paupers
It shuns not by race or colour
Flesh advances in full regalia
Untouched by time and space
It ferrets out its own
Through eons and milky ways
It rides on meteors and parades in the village square
Bereft of clothes , stoned and maimed
Flesh utters not a word when armies mutilate
Flesh is neither yours nor mine
It's black, yellow, brown and white
Flesh burns on pyres with widows and orphans
Flesh asks not recompense for its charred visage
It merely turns to ash and flips into the rivers
Or lies stone cold as a cadaver to be skinned on a hospital table
Or sleeps with death in a muddy grave under the white lilies that you lay on it through your veil of tears .
Copyright Lily Swarn
30.8.2018
—

No comments:
Post a Comment