This is an almost translation of a poem in English by my friend LILY SWARN !
- பெருநாளின் பிறை நிலவு !
பெருநாளின் பிறை நிலவு
புன்னகைக்கும் அரைநிலவு
கண்சிமிட்டிச் சிரிக்கின்ற
தாரகையின் துணை நிலவு!
இன்றைய நிலவழகைக்
காணா திருப்பாரோ
கண்பெற்ற பயனதனைப்
பேணா திருப்பாரோ?
வெள்ளிக் கதிரணிந்த
பிள்ளைப் பெருநிலவு
வேனல் களைப்பனைத்தும்
தீர்க்கின்ற திருநிலவு!
இன்றைய இரவதனின்
இனிய நிலவரசி !
இனிமையைத் தேனாகப்
பொழிகின்ற பேரரசி !
மனமென்னும் மண்விளக்கின்
திரிகளிலே ஒளியேற்றும்
பிறைநிலவின் கதிர்வீச்சு
புன்மைகளைப் புறந்தள்ளும் !
பேரொளியாம் புன்னகையாம்
கீற்றொளியின் குளிர்ந்தகதிர்
படர்ந்தொளிரும் பாரெங்கும்
பால்பொழியும் பாங்கெனவே !
நிறைந்த நிலவொளியின்
நிம்மதிக் கீற்றணைந்து
நிலைக்கும் மனங்களிலே
பிரார்த்தனையின் பலனெனவே !
திறந்து வைத்த கதவுகளின்
சன்னல் கம்பிகளின்
ஊடே நுழைந்திடுமே
உள்ளெங்கும் நிறைந்திடுமே !
உறவாடும் கணங்களிலே
உள்ளம் குளிர்ந்திடுமே
உண்மை அன்பெனவே
ஊற்றாய் பெருகிடுமே !
--கே.பாலாஜி
ஜூன் 15 2018
- The above lines are set to music by my wife LAKSHMI BALAJI . This is just an unplugged version. The link for audio file is attached herewith.
https://soundcloud.com/saransang/lb-perunaalin-pirai-nilavu
- Original lines in English :
( Eid Moon )
How can the moon not be seen in all its splendour tonight ?
The night when the ittar in the balmy breeze inebriates the senses ?
The slip of a moon vying for attention with the silver of her paazebs
The Chhan chhan rhythm of her anklets
Pounding on his frail fist of a heart
The sheen of moonlight seeping through her aura
Igniting a million diyas on the mud plastered banisters of his vows
Who can stop her from sashaying through closed doors and bolted windows
She is the reigning queen tonight
She is his Eid Ka Chaand
Copyright : Lily Swarn 14.6.2018

No comments:
Post a Comment