Saturday, June 9, 2018

பூக்கள் போற்றுதும்..

Tamil Translation done by me of a Poem  titled  'Ah to be a flower'  penned by my friend LILY SWARN:

பூக்கள் போற்றுதும் ...


பூக்கள் போற்றுதும் ...
----------------------------

மனிதன் மலராய் பிறந்திருந்தால்...
மனிதம் என்னும் மணத்தைப் பரப்ப
மலராய் மனிதன் பிறந்திருந்தால்...

'இன்று புதிதாய் மலர்ந்தோம்' என்னும்
மகிழ்வை மட்டும் தாம் பரப்பும்
மலர்கள் தமக்குத் துயரில்லை  !
கடந்த பிறவி கர்மவினைகள்
என்பவை யெதுவும் பொருட்டில்லை !

தானெனும் அகந்தை அவற்றுக் கில்லை
தன்மய மாக்கும் சிரிப்பே எல்லை !
தண்மை நிறைந்த மலர்ச்சி போதும்
மனதை மயக்கும் அழகைக் கூட்ட, 
மதுரம் நிறைந்த தேனைக் கூட்டி
மரகதத் தும்பிகள் தமக் கூட்ட !

அமுதம் நிகர்த்த அன்பை ஈயும்
அவற்றின் அழகுக் கிணையேது !
போதும் என்றொரு எண்ண மதனை
ஈயும் யோக நிலையீதே  !

போரும் இல்லை புன்மைக ளில்லை
அரக்கம் என்பதை எதிர்கொளும் நிலையிலை !
மொட்டா யிருப்பது மலர்ந்தால் போதும் 
மலர்ந்தே மணத்தை யளித்தால் போதும்  !

முட்செடி யதனின் மலரா னாலும்,
கள்ளியில் மலர்ந்த மலரானாலும்,
பூஜைக் குகந்த பூவிலை யெனினும்,
புல்லின் நுனியில் மலர்ந்த தெனினும்,

பாலையி னிடையில் பூத்த தெனினும்,
பனி படர்ந்த பாதையி லெனினும்,
'மறந்திட வேண்டாம்' என்றே சொல்லி
மலைச்சரி வினிலே மலர்ந்த தெனினும்,

பூவெனும் அழகு புன்னகை பூக்கும்
புலர்ந்த பொழுதாய் மனதில் நிலைக்கும்  !
காலைப்பறவை, கண்ட மகிழ்வில்
வானை நிறைத்துச் சிறகை விரிக்கும் !

பூக்கள் போற்றுதும் பூக்கள் போற்றுதும் !
காயப் படுத்தல் என்பதே அறியாப்
பூக்கள் போற்றுதும் பூக்கள் போற்றுதும்  !

மகிழ்ச்சி ஒன்றையே மணத்தால் நிறைத்திடும்
பூக்கள் போற்றுதும் பூக்கள் போற்றுதும்  ! 

தாய்நா டதனைக் காத்திடும் வீரர்
தாயகம் திரும்பும் வழிகளில் நிறைந்து 
வரவேற் றவர்தம் மகிழ்வில் சிரித்திடும்
வண்ண வண்ணப் பூக்கள் போற்றுதும்  !

கசக்கிப் பிழியும் கைகளில் கூட
மணமே நிறைத்திடும் குணப்பெருங் கடலாம்
பூக்கள் போற்றுதும் பூக்கள் போற்றுதும் 
புண்ணிய ராகிய பூக்கள் போற்றுதும்  !

---K.Balaji
June 09 2018


Original in English : 

Ah !to be a flower
If only humans were flowers
Born to spread radiance and fragrance
Bewitching with their dazzle
Knowing their fate
No Karma mysteries
No one upmanship
Just a serene blossoming
A blissful enchantment
Myriad bumble bees
Buzzing and circling
Benevolently donating honey
To the eager recipients
Nectar sodden
Hues of love
Blooming in euphoric yogic contentment
No wars to fight
No demons to slay
Just uncurl from a bud
And glow in any place
A desert flower on a thorny cactus
A rhododendron in the snow line
A forget me not sprouting in the ocean caressed cliffs
Letting the humming bird flirt with its petals in broad sunlight !
Ah to be a flower
That hurts not a soul
Ah to be a flower
That lives to give joy
Ah to be a flower
Whose petals line the streets
For warriors coming home
From the strife and struggles
Letting itself be mutilated
Perfuming the hand that crushes it
Ah to be a flower 

--Copyright: Lily Swarn 9.2.2018

No comments:

Post a Comment

அத்யாத்ம ராமாயணம் - வேள்விக் காப்பு /அகலிகையின் துதி

பராசக்தி 🙏 This is a Translation of a portion from the Malayalam Book "Adyaathma Ramayanam Malayalam - SwamiChidananda Saraswathi , wh...