Monday, May 28, 2018

கூவ மறக்குமோ குயில்?


குயில் எங்கோ
நிறுத்தாமல்
கூவி அழைக்கிறது..
கூக்குரலில் உணர்வுகளைக்
குழைத்து அழைக்கிறது!
என்ன அதன் எண்ணம்?
ஏனிந்த ஏக்கம்?
என்னென்று புரியாத
உணர்ச்சிக் கலவைகளின்
உன்னதக் குரலோசை !

இணையைத் தேடி
அழைக்கிறதா?
இன்பம் தன்னைப்
பகர்கிறதா?
மனது க்கோர்
துணைக்காக
மனம் கசிந்து
கரைகிறதா?

ஆடொன்று
தன்குட்டி
தனைத் தேடிக்
குரலெழுப்பும்
ஏக்கத்தின் பிரதிபலிப்பு
இதன் குரலில்
காண்கிறதே !

இணைகாணா
துக்கம்தான்
தொடர் குரலாய்க்
கூவித்
துளைக்கிறதோ
மௌனத்தை ?

மணம் வீசும் மாம் பூக்கள்
மாம்பிஞ்சாய் தாம் மாறிக்
கொஞ்சும் மதலையெனக்
குலைகுலையாய் தொங்குமொரு
மாஞ்சோலை தனிலேயோர்
மூலையிலே வந்தமர்ந்து
முறைவைத்துக் குரலெழுப்பும்
குயிலின் மனக்குறைதான்
என்னென்று புரியாதோ?
வெந்தமனம் தணியாதோ?

காற்றினால் அலைக்கழிந்த
மாம்பூக்கள் தாமுதிர்ந்து
சருகாகி மிதிபட்டுச்
சாகும் கொடுமைதனைக்
குயிலொன்றே அறியும்!
அதன்
குரலொன்றே மொழியும் !

கொடுங்காற்று பேயாகச்
சுழன்றடித்து வீசும்வரை,
சூல்கொண்ட மேகங்கள்
சுமைதாங்க முடியாமல்
சுமந்த நீரதனைப்
பெருமழையாய்
பேரிரைச்சல் தன்னோடு
பொழிந்து தள்ளுகின்ற
காலம்வரை
குயிலதனின் கூவல்
நிற்காது !

இன்னும் கூவிக்
குறை சொல்லக்
குறையொன்றும் இல்லாத
நிலையெய்தும் காலம்வரை,
அதன் கூவல்
கேட்கும்,
நிற்காது !
அது
கூவ மறக்காது !



தமிழாக்கம்
கிருஷ்ணமூர்த்தி பாலாஜி
16 05  2018

Original  lines in  English by LILY SWARN :

The Koel cannot stop

It simply has to call out

Insistently

It’s tough to decode the emotion

Is it a joyful note

Full of euphoria ?

Or a searching cry

Like a sheep bleating for its lamb ?

Perhaps it’s an inquisitive shout out to its mate

The tenor and tone remains constant

While the fragrant bunches of mango blossoms

Become tiny green baby mangoes clustered on a branch

The Koel knows that the winds have blown away a few flowers

Those that were not destined to be fruit

They got trampled under shoes

The Koel sits hidden amidst the deep green pointed leaves

She will keep up her yearning calls

Till the monsoon rains thrash the parched land

The damp winds heavy with desire

The coal black clouds gathered in an assembly

Till her throat tells her to stop

There is nothing more to sing for .

Copyright Lily Swarn 15.4.2018

அன்பே அன்னை அனைத்தும் அன்னை


அன்பே அன்னை ! அனைத்தும் அன்னை!



I was impressed with the wonderful verses in English, about Mother, by my friend Lily Swarn. I felt like translating immediately in Tamil. Both versions are given below:



அன்பே அன்னை ! அனைத்தும் அன்னை!
அன்னையின் அன்பே காத்திடும் என்னை !

மென்மழைச் சாரலின் தண்மை என்அன்னை !
மேவிய தழுவலில் மேகம் என் அன்னை !
வளைக்கை ஓசையின் தாலாட் டன்னை !
வீரம் ஊட்டும் தமிழ்ப் பாட் டன்னை !

மணமிகு துணிகளில் அணைத்தே எடுக்கும்
அன்னையின் தழுவலில் பாது காப்பு !
உழைக்கும் கரங்கள் ஊட்டும் உணவில்
மிளிரும் தெய்வீகப் பிரதிபலிப்பு !

காப்பதற்கெனவே நின்றிடும் துர்க்கை !
கல்வி யளித்திடும் கருணையி லேயவள்
கையில் வீணையும் ஏடும் கொண்டு
காட்சி யளித்திடும் வாணி !
தின்மை நீக்கிடும் சாமுண்டி,
தேர்ந்த தாயவள் மாகாளி !

பெற்ற தாயவள் பேணும் தெய்வம்!
பேறும் வீரமும் நல்கிடும் தெய்வம் !
போற்றிடும் சக்தியே தாயின் உருவம்!
புனைவது அனைத்தும் அவள் செயலாலே !

அவளில் பிறந்து அவள்நிழ லானேன் !
அன்பில் கலந்து அவளுரு வானேன் !

அவள்குரல் என்னில் என்பார் சிலரும் !
அவள்சிரிப் பெனக்கும் உண்டெனச் சிலரும் !
அவளது கடுமை என்னில் திகழும் !
அவளென் மூச்சுக் காற்றினில் என்றும் !

வாழ்வென தன்னை அன்பால் நெய்து 
பண்பால் போர்த்தி வழங்கிய பட்டு !
தாழ்வெனக் கில்லை ! தாய் அவள் எல்லை !
தூயவள் அன்பால் என்றும் குறையிலை !

    அன்பே அன்னை ! அனைத்தும் அன்னை!
    அன்னையின் அன்பே காத்திடும் என்னை !

---K. BALAJI
17.05.201


Click the following link to hear Mrs.LAKSHMI BALAJI, my wife, who sings the above , setting the tune for lyrics herself.


ORIGINAL LINES:

For Mother:

She drizzles like a gentle rain
From realms of soft cuddles
Bangled arms rock me to sleep
Cooing songs of valiant beings

Protective folds of fragrant fabric
Clothing me in satin splendour
Hands toil to feed me goodies
Suffusing me with divine ardour

Durga to protect me
Saraswati to instruct
Veena Pustak Dharini
Or Chandi to destruct
She is my Kali
Goddess I adore
She my power divine
My Shakti incarnate

Born of her I am her shadow
They say I sound like her
Some say I smile her smile
And even scold like her
She lives in me each breath
This life is also a gift
So lovingly wrapped by her !

Copyright : Lily Swarn 7.6.2016

அத்யாத்ம ராமாயணம் - வேள்விக் காப்பு /அகலிகையின் துதி

பராசக்தி 🙏 This is a Translation of a portion from the Malayalam Book "Adyaathma Ramayanam Malayalam - SwamiChidananda Saraswathi , wh...